இரண்டு லாரிகள் ஒன்றுடன் ஒன்று மோதி தீப்பிடித்து எரிந்த விபத்து.. 2 பேர் உடல்கருகி பலி!

0 4613

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 2 லாரிகள் மோதி தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் 2 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் காற்றாலையின் உதிரி பாகங்களை இறக்கி விட்டு டாரஸ் லாரி ஒன்று திருச்சி மாவட்டம் துவாக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது.

நள்ளிரவில் மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி அருகே சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டாரஸ் லாரி எதிர் சாலைக்கு சென்று சிமெண்ட் ஏற்றிக் கொண்டு சென்ற மற்றொரு லாரி மீது மோதியது. இதனால் 2 லாரிகளும் தீப்பிடித்து கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது.

இந்த விபத்தில் டாரஸ் லாரியில் இருந்த 2 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இது பற்றி தகவல் அறிந்த தும் தீயணைப்புத்துறையினர் விரைந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். விபத்து காரணமாக திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments