ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டணச் சலுகை வழங்கலாம்.. நாடாளுமன்ற எம்பிக்கள் குழு பரிந்துரை!

0 2329

ரயில்களில் நிறுத்தி வைக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான பயண கட்டண சலுகைகளை மீண்டும் அமல்படுத்தலாம் என எம்.பி.,க்கள் குழு மத்திய அரசுக்கு தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளது

ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு சலுகைகள், கொரோனா பரவல் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.அவர்கள் சலுகைகளை தாமாக முன்வந்து கைவிட ஊக்குவிக்கும் திட்டமும் அமல்படுத்தப்பட்டது.

இதில், வசதியான மூத்த குடிமக்கள் தங்கள் சலுகைகளை விட்டுக் கொடுத்ததால் ரயில்வேக்கு கணிசமான லாபம் கிடைத்தது. மீண்டும் ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு கட்டணச்சலுகை வழங்க அரசுக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments