இவுங்க அப்பவே அப்படி இப்ப கேட்க வேணுமா ? அடிபம்புக்கு சமாதி..!

0 3779

மோட்டார் சைக்கிளுடன் கான்கிரீட் சாலை அமைத்து, குடிநீர் எடுக்கும் அடிபம்ப்பை சமாதி போல சுவருக்குள் வைத்து கட்டிய நிகழ்வு வேலூர் மாநகராட்சியில் அரங்கேறி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்துடன் சேர்த்து கான்கிரீட் சாலை போட்டதால் வேலூர் மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி ஒர்க் தனிக்கவனம் பெற்றது

அந்தவகையில் வேலூர் மாநகராட்சி மண்டலம் இரண்டிற்கு உட்பட்ட பகுதியான 19ஆவது வார்டு விஜயராகவபுரம் இரண்டாவது தெருவில் இருந்த போர்வெல் அடிபம்புடன் சேர்ந்து கழிவுநீர் கால்வாயின் தடுப்பு சுவர் கட்டப்பட்டது.

இந்த செயலால் பயன்பாட்டில் இருந்த அடிப்போம் பை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

குடிநீர் குழாய்க்கு சமாதி கட்டப்பட்டது தொடர்பாக செய்தி வெளியானதன் எதிரொலியாக அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் தங்கள் தவறை மறைப்பதற்காக உடனடியாக போர்வெல் அடிப்பம்பின் மேல் பகுதியை அகற்றி விட்டு போர்வெல்லை மூடிவிட்டு சென்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments