குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கர் இன்று பதவியேற்பு.!
நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக ஜக்தீப் தன்கர் இன்று பதவியேற்கிறார். குடியரசுத் தலைவர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
கடந்த 6ந் தேதி நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஜகதீப் தன்கர் வெற்றி பெற்றார். மொத்த எம்.பி.களில் 92 புள்ளி 94 சதவீதம் பேர் அவருக்கு வாக்களித்தனர்.
நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் பதவியேற்கும் நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுகிறது. பிற்பகல் 12.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து மாநிலங்களவைத் தலைவராகவும் அவர் செயல்படுவார்.
71 வயதான ஜக்தீப் தன்கர் ராஜஸ்தான் மாநிலம் கிதானா பகுதியைச் சேர்ந்தவர். வழக்கறிஞருக்குப் படித்த இவர், அரசியல் பயணத்தைத் தொடங்கினார். 1989ல் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது சந்திரசேகர் அமைச்சரவையில் இணை அமைச்சராக இருந்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார். 2019- ஆம் ஆண்டு மேற்குவங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட ஜெகதீப் தன்கர் 3 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.
Comments