உள்நாட்டு விமானச் சேவைகளுக்கான கட்டண வரம்பு ஆகஸ்ட் 31ம் தேதியுடன் ரத்து - மத்திய அரசு
உள்நாட்டு விமானச் சேவைகளுக்கான கட்டண வரம்பு ஆகஸ்ட் 31ம் தேதியுடன் ரத்து செய்யப்படுவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
விமான எரிபொருளின் விலை ஒரு கிலோ லிட்டருக்கு 21 ஆயிரம் ரூபாயாக குறைந்ததை அடுத்து டிக்கெட் விலை உயர்வை தடுக்கும் வகையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
மேலும், விமான எரிபொருள் விலையில் ஆரோக்கியமான சூழல் ஏற்பட்டவுடன், உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கான கட்டண வரம்பை அரசு மறுமதிப்பீடு செய்யும் என்றும் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.
Comments