இன்ஸ்டாகிராம் புகைப்படத்தால் பணியில் இருந்து நீக்கிய பல்கலைகழகம் மீது வழக்கு தொடர இருப்பதாக பேராசிரியை தகவல்
கொல்கத்தாவில் நீச்சல் உடையில் தனது புகைப்படம் இன்ஸ்டாகிராமில் இருந்ததால், தன்னை வற்புறுத்தி பணியிலிருந்து ராஜினாமா செய்ய வைத்த பல்கலைகழகம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக பேராசிரியை தெரிவித்துள்ளார்.
செயிண்ட் சேவியர் பல்கலைக்கழகத்தில் பயிலும் 18 வயது மாணவர் மொபைல் போனில், நீச்சல் உடையில் இருந்த தனது பேராசிரியையின் புகைப்படத்தை பார்த்துள்ளார். இதனை கண்டு திகைத்த அவரது தந்தை, ஒரு ஆசிரியை நீச்சல் உடை அணிந்து சமூக ஊடகங்களில் புகைப்படங்களைப் பதிவேற்றுவதைப் பார்த்து ஒரு பெற்றோராக தனக்கு வெட்கக்கேடாக உள்ளதாக குறிப்பிட்டு நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
விசாரணையில், பல்கலைகழகத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாக கூறி பேராசிரியையை 99 கோடி ரூபாய் வழங்கக்கோரிய நிர்வாகம், அவரை ராஜினாமா செய்ய வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
அதேநேரம் தனது தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த புகைப்படத்தை யாரேனும் ஹேக் செய்து வெளியிட்டுருக்கலாம் என பேராசிரியர் கூறிய நிலையில், இந்த விவகாரம் ஒருவரின் தனிப்பட்ட உரிமையில் தலையிட்டு எவ்வாறு அவரை தண்டிக்கலாம் என்ற விவாதத்தை எழுப்பியுள்ளது.
Comments