இந்தியாவின் எதிர்ப்பை மீறி நாளை இலங்கை வரும் சீன உளவுக்கப்பல் ; மெரினா கலங்கரை விளக்க ரேடாரில் பழுது நீக்கும் பணிகள் தீவிரம்
இந்தியாவின் எதிர்ப்பை மீறி நாளை இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகத்திற்கு சீன உளவுக்கப்பல் வர உள்ளதால் சென்னை கலங்கரை விளக்கத்தில் உள்ள ரேடாரை பழுது நீக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
'யுவான் வாங் -5' என்ற அந்த உளவுக்கப்பலின் மூலம் 750 கிலோமீட்டர் தூரம் வரை தென்னிந்திய மாநிலங்களை கண்காணிக்க முடியும் எனக்கூறப்படுகிறது. கடலோர பகுதிகளில் கப்பல்கள், படகுகளின் நடமாட்டத்தை துல்லியமாகக் கண்காணிக்கும்வகையில் மெரினா கலங்கரை விளக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த ரேடார் 10 நாட்களுக்கு முன் பழுதடைந்ததாக கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 15 சுதந்திர தின கொண்டாட்டம், சீன உளவுக்கப்பல் வருகை போன்ற காரணங்களால், ராட்சத கிரேன் மூலம் ரேடார் கீழே இறக்கப்பட்டு பழுது நீக்கம் செய்யப்பட்டுவருகிறது.
Comments