பன்னாட்டுப் பயணிகளின் விவரங்களையும் விமானம் புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன் வழங்க வேண்டும் - மத்திய அரசின் சுங்கத் துறை அறிவுறுத்தல்
அனைத்துப் பன்னாட்டுப் பயணிகளின் விவரங்களையும் விமானம் புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன் வழங்க வேண்டும் என விமான நிறுவனங்களிடம் சுங்கத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
பயணியின் பெயர், பயண நாள், தொடர்பு விவரங்கள், கட்டணம் செலுத்திய விவரங்கள், கிரெடிட் கார்டு எண்கள், கொண்டுவந்த பைகள், இருக்கை விவரம், பயணச் சீட்டு வழங்கிய முகமை உள்ளிட்ட 19 விவரங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் விமான நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இது பயணியர் விவரங்களை வழங்குவதில் ஒரு தரமான செயல்முறையை உருவாக்குவதாகவும், தரப்படுத்தப்படாத வேண்டுகோள்கள் பயணியரின் தனியுரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் என்றும் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பயணியின் பெயர், நாடு, கடவுச்சீட்டு விவரங்கள் ஆகியவற்றை முன்கூட்டிக் குடியிறக்கத் துறைக்குத் தெரிவிப்பதும், அரசின் முகமைகள் கேட்டுக்கொண்டால் மட்டுமே பயணியரின் விவரங்களை வழங்குவதும் இப்போது நடைமுறையில் உள்ளது.
Comments