கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் வெளிப்படைத்தன்மை அவசியம் - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

0 2447

தொடர்ந்து ஒருவரே கூட்டுறவு சங்கத் தலைவராவதை தடுக்கும் வகையில் விதிமுறை வகுக்கப்படும் என கூட்டுறவுத் துறையையும் கவனிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு சங்கங்களை அரசின் இ-மார்க்கெட் தளத்தில் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் பேசிய அவர், கூட்டுறவுத்துறை நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டு வந்ததாகவும், அதை நவீனப்படுத்தி அதிக சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கூட்டுறவுத்துறையில் அனைத்து மட்டங்களிலும் வெளிப்படைத்தன்மை அவசியம் என்று கூறிய அமித்ஷா, ஒரே நபர் ஆண்டுதோறும் கூட்டுறவு சங்க நிர்வாகியாக தேர்வு சரியல்ல எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments