பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு கடந்த நிதியாண்டில் 26 லட்சம் ரூபாய் உயர்வு.!

0 3751

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு கடந்த நிதியாண்டில் 26 லட்சம் ரூபாய் அதிகரித்து 2 கோடியே 23 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது.

மார்ச் மாதம் வரையிலான மோடியின் சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி மோடிக்கு சொந்தமான அசையும் சொத்துகளின் மதிப்பு கடந்த நிதியாண்டைவிட 26 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது.

காந்திநகரில் தனக்கு சொந்தமான ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தானமாக அளித்ததாகவும், அரசு நிதிப் பத்திரங்கள், நிறுவனப் பங்குகள் எதிலும் முதலீடு மேற்கொள்ளவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments