போன், லேப்டாப், டேப்ளட்களுக்கு இரண்டே விதமான சார்ஜிங் போர்ட்டுகள்.. தொழில்துறையினருடன் விவாதிக்க மத்திய அரசு அழைப்பு!
மொபைல்போன், லேப்டாப், டேப்லட், ஸ்பீக்கர்கள் ஆகியவற்றுக்கு இரண்டே விதமான பொதுவான சார்ஜரைப் பயன்படுத்துவது தொடர்பாக வரும் 17ந் தேதி மத்திய அரசு விவாதிக்க உள்ளது.
இதுபற்றி ஆலோசிக்க வருமாறு தொழில்துறையினருக்கு நுகர்வோர் விவகார அமைச்சக அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். நாட்டில் பல்வேறு சார்ஜர்களின் பயன்பாட்டை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்கும், மின்-கழிவுகளைத் தடுப்பது குறித்தும், இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதன் மூலம் ஒவ்வொரு முறையும் பொதுமக்கள் புதிய மின்னணு சாதனங்களை வாங்கும்போதும் புதிய சார்ஜரை வாங்குவது தவிர்க்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Comments