ஸ்கூட்டருடன் ஆற்றுக்குள் தூக்கி வீசப்பட்ட ஆசிரியை..! பாய்ந்து காப்பாற்றிய காவலர்..!
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே இரு சக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற அரசு பள்ளி ஆசிரியை மீது மற்றொரு வாகனம் மோதியதில் வாகனத்துடன் ஆற்றுக்குள் தூக்கிவீசப்பட்டு தத்தளித்த ஆசிரியையின் உயிரை ஆற்றில் குதித்து போலீஸ்காரர் காப்பாற்றினார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மகிழஞ்சேரியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவரது மனைவி உஷா . இவர் நன்னிலம் அடுத்த ஆணைக்குப்பம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டிலிருந்து பள்ளிக்கு இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற ஆசிரியை உஷா, பனங்குடி அருகே சென்ற போது எதிரே வந்த முகமது நிசாருதீனின்இருசக்கர வாகனம் மோதியது. அந்த இரு சக்கர வாகனம் மோதிய வேகத்தில் ஆசிரியர் உஷா ஆற்ற்குள் தூக்கி வீசப்பட்டார்.
ஆற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் தத்தளித்த உஷா உயிருக்கு போராடினார். அவரது இரு சக்கர வாகனம் சேதமடைந்தது.
அவ்வழியாக வந்த நன்னிலம் காவல் நிலைய போலீஸ்காரர் செல்வேந்திரன் என்பவர் தாமதிக்காமல் ஆற்றில் குதித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆசிரியயை உஷாவின் உயிரை காப்பாற்றி கரைக்குக் கொண்டு வந்தார்.
இருசக்கர வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டதில் ஆசிரியை உஷா பலத்தகாயத்துடன் காணப்பட்டதால் உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆற்றில் குதித்து ஆசிரியயையின் உயிரை காப்பாற்றிய காவலர் செல்வேந்திரனை அங்கிருந்த மக்கள் வெகுவாக பாராட்டினர்.
Comments