கொஞ்சம் அழகா இருந்தா அப்படியே கிட்னாவா..? சிறுமியை தூக்கிய தம்பதி..!

0 3747
கொஞ்சம் அழகா இருந்தா அப்படியே கிட்னாவா..? சிறுமியை தூக்கிய தம்பதி..!

உசிலம்பட்டி அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி கடத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தினா.விலக்கு பகுதியை சேர்ந்தவர் சாரதி.ஸ்வீட் ஸ்டால் நடத்தி வரும் இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

செவ்வாய் கிழமை காலையில் இவரது குடும்பத்தினர் வீட்டினுள் இருந்த நிலையில் இவர்களது 5 வயது மகள் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி ஒன்று ஜனனியை தூக்கி கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் சிறுமி கடத்திச் செல்லப்படுவதாக கூச்சலிட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே தந்தை சாரதி போலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உசிலம்பட்டி நகர் போலிசார் வழக்குபதிந்து இரு சக்கரவாகனத்தில் சிறுமி கடத்தப்பட்டது குறித்து ரோந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்

அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சிறுமியை கடத்திச்சென்ற தம்பதியை மடக்குவதற்காக வாகன சோதனையை தீவிரப்படுத்தினர்.

இந்தநிலையில் குழந்தையை தூக்கிச் சென்ற தம்பதியினர் மீண்டும் குழந்தையை கொண்டு வந்து விட்டபோது பிடிபட்டனர்.

விசாரணையில் குழந்தையை தூக்கிச் சென்றது குமார் - மகேஸ்வரி தம்பதியினர் என்பது தெரிய வந்தது. இதனால் சிறுமியை காணாமல் பரிதவித்துப் போன பெற்றோர் இயல்பு நிலைக்கு திரும்பினர்.

எதற்காக தூக்கிச் சென்றனர் என்பது குறித்து பைக் தம்பதியிடம் போலீசார் விசாரித்த போது, குழந்தை அழகாக இருந்தால் தூக்கிச் சென்றதாகவும், பின்பு தவறை உணர்ந்து திருப்பி கொண்டு வந்து விட்டதாகவும் கூறியுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments