தனது பூர்வீக வீட்டை தானே ஆள் வைத்து இடித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அபூர்வா..!

0 4278
தனது பூர்வீக வீட்டை தானே ஆள் வைத்து இடித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அபூர்வா..!

திருவள்ளூர் மாவட்டம் தொழுதாவூர் கிராமத்தில், நீர் நிலையை ஆக்கிரமித்து வீடு கட்டப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் , ஐ.ஏ.எஸ் அதிகாரி அபூர்வா தனது தாயார் வசித்த பூர்வீக வீட்டை தானே ஆட்களை வைத்து இடித்தார். 

தொழுதாவூரில் 6 ஏக்கர் பரப்பளவில் இருந்த வெள்ளை குட்டையில் 8 வீடுகள், 1 கடை உள்பட 9 கட்டிடங்கள் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவு படி வருவாய்த்துறை அதிகாரிகள் இன்று ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்தனர்.

ஆனால், ஐ.ஏ.எஸ். அதிகாரி அபூர்வாவின் தாயார் வீட்டை மட்டும் அதிகாரிகள் இடிக்காமல் தாமதப்படுத்தியதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததால், ஐ.ஏ.எஸ்.அதிகாரி அபூர்வா உடனடியாக தனது பூர்வீக வீட்டை தானே ஆள்வைத்து இடித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments