ரூ.900 கோடி மதிப்பிலான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் எத்தனால் ஆலை.. பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்..!
ஹரியானாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 900 கோடி ரூபாய் மதிப்பிலான எத்தனால் ஆலையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.
பானிபட்டில் உள்ள அரசின் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள அந்த எத்தனால் ஆலை, ஆண்டிற்கு சுமார் 2 லட்சம் டன் வைக்கோலைப் பயன்படுத்தி 3 கோடி லிட்டர் எத்தனாலை உற்பத்தி செய்யும் திறன்பெற்றதாகும்.
நாட்டில் உயிரி எரிபொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அந்த ஆலை அமைய உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
Comments