தலைமுடியை பிடித்து உதைத்த இன்ஸ்டா காதல் கண்ணாளன்..! 2 வது காதல் சோகங்கள்

0 11449
தலைமுடியை பிடித்து உதைத்த இன்ஸ்டா காதல் கண்ணாளன்..! 2 வது காதல் சோகங்கள்

இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து 2 வது திருமணம் செய்து கொண்ட பெண்ணை அவரது  காதல் கணவர் அடித்து சித்திரவதை செய்யும் வீடியோ வெளியான நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள பெரியவடகம்பட்டியை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழ்ந்த விசித்திரா என்ற 22 வயது பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

முதல் கணவருக்கு பிறந்த 2 வயது மகன் விசித்திராவுடன் உள்ள நிலையில் இது சிலம்பரசனுக்கு பிடிக்கவில்லை.

இதனால் குழந்தையின் தலைமுடியை பிளேடால் அலங்கோலமாக்கி கொடுமைப்படுத்தியதுடன், காதல் மனைவியையும் அடித்து சித்திரவதை செய்து வந்துள்ளார்

தினந்தோறும் மது மற்றும் கஞ்சா போதையில் வீட்டிற்கு வந்து தலைமுடியை பிடித்து இழுத்து, காலால் உதைத்து தொல்லை கொடுப்பதால் விசித்ரா தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பெயரில் தீவட்டிப்பட்டி போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை செய்து, போதை கணவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் மீண்டும் மது மற்றும் கஞ்சா போதையில் வீட்டிற்கு வந்து விசித்திராவை கடுமையாக தாக்கிய நிலையில் அதனை பக்கத்து வீட்டு பெண்ணின் மூலமாக வீடியோ எடுத்து போலீசில் அளித்த நிலையில் இன்ஸ்டா காதல் கண்ணாளன் இம்சிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவியதையடுத்து தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இன்ஸ்டாவில் இனிமையாக பேசும் இவன் யார் ? என்று தெரிந்து கொள்ளாமல் இன்ஸ்டண்டாக காதலில் விழுந்து, திருமண வாழ்க்கை அமைத்துக் கொண்டால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சாட்சியாய் மாறி இருக்கின்றது இந்த சம்பவம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments