தமிழக மக்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல, இந்தி திணிப்புக்குத்தான் எதிரானவர்கள் - திமுக எம்.பி. ராஜேஷ்குமார்

0 3440

தமிழக மக்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல, இந்தி திணிப்புக்குதான் எதிரானவர்கள் என்று, திமுக எம்பி ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஒன்றிய பல்கலைக்கழக திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர், தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து நிறுவனத்தின் பெயரை, கதி சக்தி விஸ்வ வித்யாலயா என இந்தியில் பெயர் மாற்றம் செய்வது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

இது தமிழகம் மற்றும் கேரள மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் நடவடிக்கை என்றும், உடனடியாக இதன் பெயரை இந்திய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகமாக ஆங்கிலத்தில் மாற்ற வேண்டும் என்றும் ராஜேஷ் குமார் வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments