மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 18 அமைச்சர்கள் பதவியேற்பு
மஹாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் இன்று புதிய அமைச்சர்களாக 18 பேர் பதவியேற்றுக்கொண்டனர்.
இதில் 9 பேர் பாஜக வை சேர்ந்தவர்கள். 9 பேர் ஷிண்டேவின் சிவசேனா கட்சியை சேர்ந்தவர்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிய முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டேயும், துணை முதல்வராக பா.ஜ.வின் தேவேந்திர பட்னவிசும் கடந்த ஜூன் 30 ஆம் தேதி பதவியேற்றனர்.
இந்நிலையில், 40 நாட்களுக்குப் பின் இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 18 புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் பகத்சிங் கோசியாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
Comments