படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த இரண்டு மீனவர்களை பத்திரமாக மீட்ட கடலோர காவல்படை

0 2951

குஜராத் மாநிலம் ஓகாவில் படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த இரண்டு மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.

கடற்கரை நகரமான ஓகாவில் ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த விசைப்படகு ராட்சத அலையில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தொடர்ந்து, கடலில் அலையின் வேகம் அதிகமாக இருந்ததால் கரைசேர முடியாமல் படகின் நுனியை பிடித்துக் கொண்டு மீனவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த கடலோர காவல் படையினர், அவர்களை பத்திரமாக மீட்டு மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments