ஆன்லைன் ரம்மி மோகத்தினால் ஏற்பட்ட விபரீதம்.. ரூ.55லட்சம் நகைகளை மோசடி செய்ததாக மேற்பார்வையாளர் மீது போலீசில் புகார்
கோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மீது ஏற்பட்ட மோகத்தால், தான் வேலை செய்த நகைக் கடையிலிருந்து 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை மோசடி செய்த மேற்பார்வையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சலீவன் வீதியில் உள்ள எமரால்டு ஜூவல்லர்ஸ் கடையில் ஜெகதீஷ் என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.
சில மாதங்களாக தங்க கட்டிகளை பட்டறை கொடுத்தது போல் கணக்கு காட்டியும், பழுதான தங்க நகைகள் என கணக்கு காட்டியதாகக் கூறப்படுகிறது.
போலியாக பதிவேடு தயாரித்ததோடு கம்ப்யூட்டர் பதிவுகளிலும் திருத்தம் செய்து 1467 கிராம் எடையில் 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை மோசடி செய்ததாக ஜெகதீஷ் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
Comments