உக்ரைனுக்கு மேலும் ஒரு பில்லியன் டாலர் மதிப்பில் ராணுவ உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு.!
உக்ரைனுக்கு கூடுதலாக ஒரு பில்லியன் டாலர் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஹிமார்ஸ் எனப்படும் அதிநவீன ஏவுகணை அமைப்புகள், பீரங்கி குண்டுகள், ராணுவ கவச வாகனங்கள், ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட திறன்மிக்க ஆயுதங்கள் இந்த தொகுப்பில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் 150 நாட்களை கடந்துவிட்ட நிலையில், கிழக்கு உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன.
போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா ராணுவம், நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.
Comments