ரஷ்ய வீரர்கள் பயன்படுத்தக்கூடிய 2 பாலங்கள் மீது உக்ரைன் படைகள் ஏவுகணை தாக்குதல்

0 3499

நிப்ரோ ஆற்றை கடக்க ரஷ்ய வீரர்கள் பயன்படுத்தக்கூடிய 2 பாலங்கள் மீது உக்ரைன் படைகள் ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தியுள்ளன.

மெலிட்டோபோல் நகரை கைப்பற்றியுள்ள ரஷ்ய படைகள், அந்த 2 பாலங்கள் வழியாக உக்ரைனின் தென் பகுதியை அடையத் திட்டமிட்டிருந்தன.

அதிகாலை வேளை, அமெரிக்காவால் வழங்கப்பட்ட ஹிம்மர் ஏவுகணைகளை பயன்படுத்தி அந்த பாலங்கள் மீதும், ரஷ்ய நிலைகள் மீதும் உக்ரைன் ராணுவத்தினர் தாக்குதல் நிகழ்த்தினர்.

ஏராளமான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதுடன், ஆயுதங்களும் அழிக்கப்பட்டதாக மெலிட்டோபோலில் இருந்து தப்பி வந்த அந்நகர மேயர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments