கம்போடியா நாட்டில் சிக்கித்தவிக்கும் தனது மகனை மீட்டுத்தருமாறு தாய் கண்ணீருடன் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை!

0 3597

கம்போடியா நாட்டில் மோசடி கும்பலிடம் சிக்கித்தவிக்கும் தனது 27 வயது மகன் மகேஷை மீட்டுத்தருமாறு தாய் கண்ணீருடன் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் வேலைக்காக அழைத்துச்சென்று கம்போடியாவில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுமாறு நாகர்கோவிலை சேர்ந்த ஏஜென்ட்டுகள் ஆண்ட்ரூ அந்தோணி மற்றும் சிவக்குமார் தனது மகனை துன்புறுத்துவதாகவும், அவர்களுக்கு இதுவரை 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளதாகவும் மகேஷின் தாய் புகார் தெரிவித்துள்ளார்.

தனது மகன் மகேஷ் அனுப்பிய வீடியோ காட்சிகளையும் தாய் சிதம்பர வடிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments