இந்தியாவில் 5ஜி தொலைத்தொடர்புச் சேவைகள் செப்டம்பர் இறுதியில் அறிமுகமாகும் எனத் தகவல்!
இந்தியாவில் 5ஜி தொலைத்தொடர்புச் சேவைகள் செப்டம்பர் இறுதியில் அறிமுகமாகும் என்றும், முதற்கட்டமாகச் சென்னை உள்ளிட்ட 13 நகரங்களில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் 5ஜி வலையமைப்பை நிறுவும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. செப்டம்பர் 29ஆம் நாள் இந்திய மொபைல் காங்கிரசைத் தொடக்கி வைக்கும் பிரதமர் மோடி, 5ஜி சேவைகளையும் முறைப்படி தொடக்கி வைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மற்றொருபுறம் விடுதலையின் 75ஆண்டுக் கொண்டாட்டத்தையொட்டி ஜியோ ஆகஸ்டு 15ஆம் நாள் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
உலக நாடுகளை ஒப்பிடும்போது இதற்கான கட்டணம் குறைவாக இருக்கும் என்றும், உடனடியாக அனைவரும் ஏற்றுக் கொள்வதற்காகத் தொடக்கத்தில் குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாகச் சென்னை, பெங்களூர், ஐதராபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட 13 நகரங்களில் 5ஜி சேவைகள் வழங்கப்பட உள்ளது.
Comments