தொடர் விபத்துகளால் மூடப்பட்ட மலைப்பாதை 15 ஆண்டுகளில் அழகிய வனப்பகுதியாக உருமாறிய அதிசயம்..!

0 4038

பொலிவியாவில் தொடர் விபத்துகளால் 15 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட மலைப்பாதை தற்போது அழகிய வனப்பகுதியாக உருமாறியுள்ளது.

தலைநகர் லா பாஸை, அமேசான் காடுகளுடன் இணைத்த அந்த ஆபத்தான மலைப்பாதையில் ஏராளமான லாரி விபத்துகள் ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் இறந்ததால் அது மரணப்பாதை என அழைக்கப்பட்டது.

2007 ஆம் ஆண்டு அதற்கு மாற்றுப்பாதை உருவாக்கப்பட்டதால் அவ்வழியாக கனரக லாரி போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் காற்று மாசற்ற அந்த மலைப்பாதை பறவைகளும், விலங்குகளும் நடமாடும் எழில் கொஞ்சும் வனப்பகுதியாக காட்சியளிக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments