எவ்வளவு தண்ணீர் சென்றாலும் நிரம்பாத அதிசய கிணறு குறித்து ஐஐடி குழுவினர் விளக்கம்!
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே தண்ணீரை உள்வாங்கும் அதிசிய கிணற்றில் ஆய்வு நடத்திய ஐ.ஐ.டி குழுவினர், கிணற்றுக்கடியில் சுண்ணாம்பு பாறைகளால் ஆன பாதாள குகைகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
கடந்தாண்டு பருவமழையின்போது அதிகளவு தண்ணீர் சென்றும் அந்த கிணறு நிரம்பாமல் இருந்தது. நவீன தொழில்நுட்ப கருவிகளுடன் 3 மாதங்களாக அப்பகுதியில் உள்ள 160 கிணறுகளில் ஐஐடி குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, குறிப்பிட்ட அந்த கிணற்றுக்கு அடியில் இருக்கும் சுண்ணாம்பு பாறைகள், பல ஆயிரம் ஆண்டுகளாக மழைநீரில் கரைந்து துளைகள் உருவாகி, காலப்போக்கில் பெரிய குகைகளாக மாறி, பூமிக்கடியில் நீரோடைகளாக மாறியுள்ளது தெரியவந்தது.
இந்த நீர்வழி பாதைகளில் துளையிட்டு வெள்ள உபரி நீரை செலுத்தினால் அருகில் உள்ள மற்ற கிணறுகளுக்குச் செல்வதுடன், நிலத்தடி நீர்மட்டத்தையும் உயர்த்தி விவசாயிகளுக்கு பயனுள்ளதாக மாற்ற முடியும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Comments