கோதுமை மீதான இறக்குமதி வரியை 40 சதவீதம் குறைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளதாக தகவல்
நாட்டில் கோதுமையின் விலையை கட்டுக்குள் வைக்க கோதுமை மீதான 40 சதவீதம் இறக்குமதி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் மொத்த விற்பனையாளர்களிடம் இருக்கும் கோதுமை இருப்புக்கும் வரம்புகளை விதிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. உக்ரைன் போர் மற்றும் கடும் வெப்பம் காரணமாக கடந்த மேமாதம் மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது.
உள்நாட்டில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் கோதுமையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தற்போது இறக்குமதி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Comments