இந்தோனேசியாவில் நிக்கல் கொள்முதல் செய்ய டெஸ்லா நிறுவனம் ஒப்பந்தம்
அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம், மின்சார வாகனங்களுக்கான லித்தியம் பேட்டரி தயாரிக்க இந்தோனேசியாவில் இருந்து நிக்கல் வாங்க 500 கோடி டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.
உலக நிக்கல் தாதுவளத்தில் பெருமளவைக் கொண்டுள்ள இந்தோனேசியா, உள்நாட்டிலேயே மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரி தயாரிக்கும் ஆலைகளை நிறுவச் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறது.
இதற்காக நிக்கல் தாது ஏற்றுமதியையும் நிறுத்திவிட்டது. இதனால் சீன உருக்கு நிறுவனங்கள், தென்கொரியாவின் எல்ஜி, ஹுண்டாய் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து வெற்றிகரமாக முதலீட்டை ஈர்த்தது. இந்நிலையில் பேட்டரி மூலப் பொருளான நிக்கலை 5 ஆண்டுகளுக்கு இந்தோனேசிய நிறுவனங்களிடம் கொள்முதல் செய்ய டெஸ்லா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து வருவாயைப் பெருக்கும் வகையில் நிக்கல் ஏற்றுமதிக்கு வரி விதிக்கவும் இந்தோனேசியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Comments