காமன்வெல்த் தொடரின் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்றார் பி.வி.சிந்து..!
இங்கிலாந்தின் பிர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் தொடரின் பேட்மிண்டன் போட்டியில் மகளிர், ஆடவர் என இரண்டு பிரிவுகளிலும் இந்தியா தங்கம் வென்றுள்ளது.
இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கனடாவின் மிஷேல் லியை 21க்கு 15, 21க்கு 13 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
அதேபோல், ஆடவர் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென், மலேசியாவின் சே யாங்-ஐ வீழ்த்தி தங்கத்தைக் கைப்பற்றினார்.
காமன்வெல்த் தொடரில், 20 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களை இந்தியா இதுவரை வென்றுள்ளது.
Comments