சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்
சிலி நாட்டில் திடீரென உருவான 82 அடி விட்டம் கொண்ட பிரம்மாண்ட பள்ளம், பிரான்சின் நினைவுச்சின்னமான ஆர்க் டி ட்ரையம்பை விழுங்கும் அளவுக்கு ஒரே வாரத்தில் இரண்டு மடங்கு பெரிதாகியுள்ளது.
இதையடுத்து அருகிலுள்ள செப்புச் சுரங்கத்தில் பணியை நிறுத்துமாறு அதிகாரிகளை அரசு உத்தரவிட்டுள்ளது. அருகில் அமைந்துள்ள அல்காபரோசா சுரங்கத்தின் நுழைவாயிலில் இருந்து வேலைத் தளம் வரையிலான பகுதிகள் மூடப்பட்டன.இந்த ஆழ்துளையின் வான் வழிப் படங்களை சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
Comments