இஸ்ரேல் அரசுடன் பாலஸ்தீன ஜிகாத் இயக்கம் போர் நிறுத்த ஒப்பந்தம்
மேற்குக் கரைப்பகுதியான காசாவில் இஸ்ரேல் அரசுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பதாக பாலஸ்தீனிய ஜிகாத் இயக்கம் உறுதி செய்துள்ளது.
நேற்று இரவு முதல் இந்த போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. பாலஸ்தீனத்தின் சில இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது. இதில் 31 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக தொலைதூர ராக்கெட் லாஞ்சர்கள் மூலமாக ஜிகாத் இயக்கம் பதில் தாக்குதல் தொடுத்தது.
இதிலும் கடும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருதரப்புக்கும் சமாதானம் செய்ய மேற்கொள்ளப்பட்ட எகிப்தின் யோசனையை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டதையடுத்து போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Comments