ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம் 79 ஆயிரம் பேரிடம் ரூ.4,383 கோடி வசூல் ; பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் கண்டுபிடிப்பு

0 18537
ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம் 79 ஆயிரம் பேரிடம் ரூ.4,383 கோடி வசூல்

மோசடி வழக்கில் சிக்கியுள்ள ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம் தமிழகம் முழுவதும் 79 ஆயிரம் பேரிடம் 4,383 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது.

வேலூரை அடிப்படையாகக் கொண்டு இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் என்ற நிறுவனத்தை லட்சுமி நாராயணன், வேதநாராயணன் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோர் நடத்தி வருகின்றனர்.

ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 8,000 ரூபாய் தருவதாக கூறி இவர்கள் பணத்தை பெற்றுள்ளனர். இதே போல் ஆருத்ரா நிதி நிறுவனத்தில் 89 ஆயிரம் பேர் 1680 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதும், திருச்சியை சேர்ந்த Elpin -e-Com Ltd என்னும் நிறுவனம் சுமார் 5000 நபர்களிடமிருந்து 400 கோடி ரூபாய் முதலீடு பெற்றிருப்பதும் விசாரணையில் தெரிவித்துள்ளது. 3 நிறுவனங்கள் தொடர்பாகவும் 19 வழக்குகளை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments