நிதி ஆயோக் கூட்டததைப் புறக்கணித்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ; உயர்மட்டக் கூட்டத்திற்கு தமது கட்சியின் எம்பிக்கள், எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு

0 2845
நிதி ஆயோக் கூட்டததைப் புறக்கணித்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், நாளை நடைபெற உள்ள கட்சியின் உயர்மட்டக் கூட்டத்திற்கு தமது கட்சியின் எம்பிக்கள், எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பாஜகவுடன் எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை என்று நிதிஷ்குமார் கூறிய போதும் மத்திய அமைச்சரவையில் தமது கட்சியைச் சேர்ந்த யாரும் இடம் பெற மாட்டார்கள் என்றும் கூறியிருந்தார்.

கோவிட் பிரச்சினைகள் காரணமாக நிதிஷ்குமார் பிரதமரின் அழைப்பை ஏற்று நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்ட போதும் அவர் பாட்னாவில் வேறொரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments