இந்தியா-மே.தீ இடையேயான 5-வது டி-20 போட்டி: 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

0 7466

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 5-வது டி-20 போட்டியில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 64 ரன்கள் எடுத்தார். மேற்கிந்திய வீரர் ஸ்மித் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 15.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 100 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரவி பிஷ்னாய் 4 விக்கெட்டுகளையும், அக்ஷர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments