புகழ்பெற்ற சுற்றுலாத் தளத்தில் கொரோனா பரவல்… 80,000 சுற்றுலாப் பயணிகள் வெளியேற முடியாமல் சிக்கித்தவிப்பு

0 3107

சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள தீவு பிராந்தியமான சன்யாவில் கொரோனா பரவல் காரணமாக, 80 ஆயிரம் சுற்றுலா பயணிகள் அடுத்த ஒரு வாரத்திற்கு வெளியேற முடியாத வகையில் சிக்கியுள்ளனர்.

சீனாவின் பல்வேறு மாகாணங்களில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமாகியுள்ள நிலையில் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளது.

லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் சன்யா-வில் ஒரே நாளில் 483 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியான நிலையில், அங்கு உடனடியாக லாக்டவுன் கட்டுப்பாடுகளை அரசு விதித்தது.

சுற்றுப் பயணம் வந்துள்ள பயணிகள் ஒரு வாரத்திற்குள் 5 கோவிட் பரிசோதனை மேற்கொண்டு தொற்று பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

அதுவரை, அவர்கள் தங்கியிருக்கும் விடுதிகள் 50 சதவீத தள்ளுபடி கட்டணத்தில் அவர்களை தங்க வைக்க வேண்டும் என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments