செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 9ஆவது சுற்று ; ஜொலித்த இந்திய வீராங்கனைகள்

0 3077
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 9ஆவது சுற்று ; ஜொலித்த இந்திய வீராங்கனைகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 9ஆவது சுற்று ஆட்டத்தில், இந்திய மகளிர் 'பி' அணி சுவிட்சர்லாந்து அணியை முழுமையாக வீழ்த்தியது. தமிழக வீரர்களான பிரக்ஞானந்தா, சேதுராமன், கார்த்திகேயன் முரளி ஆகியோர் வெற்றி வாகை சூடினர்.

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், 9-வது சுற்றில் இந்திய ஓபன் 'ஏ' அணி, பிரேசில் அணியுடன் மோதியது. அப்பிரிவில், இந்திய வீரர்கள் அர்ஜுன், சசிகிரண் கிருஷ்ணன் ஆகியோர் வெற்றி பெற்ற நிலையில், ஹரிகிருஷ்ண பென்டாலா, விதித் சந்தோஷ் விளையாடிய போட்டிகள் டிராவானது.

இந்திய ஓபன் 'பி' பிரிவில், தமிழக வீரர் பிரக்ஞானந்தா அசர்பைஜான் வீரரை வீழ்த்தினார். அதேபிரிவில், தமிழக வீரர் குகேஷ், சரின் நிகல் விளையாடிய போட்டிகள் வெற்றித் தோல்வியின்றி சமனில் முடிந்தன. இந்திய ஓபன் 'சி' பிரிவில், தமிழக வீரர்களான சேதுராமன், கார்த்திகேயன் முரளி ஆகியோரும், அபிமன்யுவும் பாராகுவே அணி வீரர்களை தோற்கடித்தனர்.

மேலும், மகளிர் 'ஏ' பிரிவில், போலந்து அணிக்கு எதிரான போட்டிகளை கொனேரு ஹம்பி, ஹரிகா துரோணவள்ளி, தன்யா சச்தேவ் ஆகியோர் டிரா செய்தனர். மகளிர் 'பி' பிரிவில், இந்திய வீராங்கனைகளான, வந்திகா அகர்வால், பத்மினி, மேரி ஆன், திவ்யா ஆகியோர் சுவிட்சர்லாந்து அணி வீராங்கனைகளை முழுமையாக வீழ்த்தினர்.

அதேபோல் மகளிர் 'சி' பிரிவில், தமிழக வீராங்கனை நந்திதா, வர்ஷினி ஆகியோர் எஸ்டோனியா வீராங்கனைகளை தோற்கடித்தனர். அதேபிரிவில், ஈஷா, விஷ்வ வஸ்னாலா விளையாடிய போட்டிகள் சமனில் முடிந்தன.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments