ஹரியானா மாநிலத்தில் நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.!

0 2320

ஹரியானா மாநிலத்தில் நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானதில், ரோட்டக் - டெல்லி இடையிலான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியின் சகுர் பஸ்தி ரயில் நிலையத்தில் இருந்து ராஜஸ்தானின் சூரத்கருக்கு அந்த சரக்கு ரயில் சென்றுகொண்டிருந்தது.

ஹரியானாவில் கராவர் ரயில் நிலையம் அருகே அந்த ரயில் சென்றபோது, திடீரென அதன் 8 பெட்டிகள் தடம்புரண்டன. ரயில்வே பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், அப்பகுதியில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments