"எனது முடிவிலாவது அவர்களுக்கு பணம் கிடைக்கட்டும்"-கடிதம் எழுதி வைத்துவிட்டு ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவன ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை
பண மோசடி புகாரில் சிக்கிய ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்தில், பொதுமக்களிடமிருந்து ரூ.50 லட்சத்துக்கு மேல் வசூலித்து முதலீடு செய்திருந்த காட்பாடியைச் சேர்ந்த ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேவூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர், காட்பாடியில் உள்ள ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்தில் மாதம் 15 ஆயிரம் ஊதியத்திற்கு ஏஜென்டாக பணியாற்றி வந்தார். அவர் தனது கிராம மக்கள், உறவினர்கள், நண்பர்கள் என 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூலித்து அந்த நிறுவனத்தில் செலுத்தியதாக கூறப்படுகிறது.
பணத்தை செலுத்தி சில மாதங்களே ஆகும் நிலையில், 2 மாதங்களாக வட்டித் தொகை வழங்கப்படாததால் பணம் செலுத்திய மக்கள் தொடர்ந்து வினோத் குமாரிடம் கேட்டு வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் வினோத் குமார், கடிதம் எழுதி வைத்து விட்டு நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
Comments