காதலிக்கும் இளைஞரின் உறவினர்கள் திட்டியதால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை!
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே காதலிக்கும் இளைஞரின் உறவினர்கள் திட்டியதால் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விஜய் என்பவர், கோவிந்தசாமிபுரத்தில் வசிக்கும் தன் அத்தை அலமேலுவை பார்க்க சென்றபோது அருகே வசிக்கும் 12ம் வகுப்பு மாணவியுடன் அவருக்கு காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில், மகளிர் போலீசார் இருவீட்டாரையும் அழைத்து விசாரித்தபோது மாணவி திருமண வயதை எட்டியதும் இருவருக்கும் திருமணம் செய்துவைப்பதாக விஜயின் தந்தை கூறியுள்ளார்.
இந்நிலையில் அத்தை அலமேலு தனது மகன், மற்றும் கணவருடன் சேர்ந்து மாணவியைத் திட்டியதால் மனமுடைந்த மாணவி சேலையால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
Comments