தைவான் நீரிணையில் நிற்கும் சீனப் போர்க்கப்பல்கள்..!
தைவான் நீரிணை நடுக்கோட்டுப் பகுதிக்கு அருகில் சீன, தைவான் கடற்படைக் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தைவான் மீது சீனா போர் தொடுத்து அதைக் கைப்பற்றக் கூடும் எனக் கூறப்பட்ட நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு வந்து அதிபரைச் சந்தித்துச் சென்றார்.
இதையடுத்துத் தைவானைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் சீனப் போர்க்கப்பல்களும் போர் விமானங்களும் ஒத்திகையில் ஈடுபட்டன. இந்நிலையில் இருநாடுகளுக்கு இடையே அறிவிக்கப்படாத படைவிலக்கப் பகுதியான தைவான் நீரிணை நடுக்கோட்டுக்கு அருகே இருநாடுகளின் பத்துப் போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
படைவிலக்கப் பகுதிக்கு வந்துள்ள சீனக் கப்பல்களின் நகர்வைக் கண்காணித்து வருவதாகத் தைவான் கடற்படை தெரிவித்துள்ளது.
Comments