கலைஞர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினம் - முதலமைச்சர் மரியாதை

0 2613

கலைஞர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் அவரது உருவச்சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தையும் முதலமைச்சர் தொடக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து மெரினா காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

இறுதியாக மெரினா கடற்கரையில், பேரறிஞர் அண்ணா நினைவிடத்திலும், கடல் அலை போன்று அலங்கரிப்பட்டிருந்த கருணாநிதியின் நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். பின்னர், அண்ணா அறிவாலயத்தில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனிடையே, கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகரில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments