மணிப்பூர் மாநிலத்தில் இரு மாவட்டங்களில் அடுத்த 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு.. இணைய சேவை துண்டிப்பு!

0 3120

மணிப்பூர் மாநிலத்தில், பூகாக்சோவ் இகாங் (Phougakchao Ikhang) பகுதியில் வாகனம் ஒன்றை இளைஞர்கள் சிலர் தீ வைத்து எரித்ததை தொடர்ந்து ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக, சுராசந்த்பூர் மற்றும் பிஷ்ணுபூர் மாவட்டங்களில் அடுத்த இரு மாதங்களுக்கு 144  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், மக்களின் உணர்வுகளை தூண்டும் வகையில் வெறுப்பு கருத்துகளை சிலர் பகிர்வதால், மணிப்பூர் மாநிலம் முழுவதும் செல்போன் இணைய சேவைகள் 5 நாட்களுக்கு துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments