கரைபுரண்டோடும் வெள்ளத்தில் மாடு அடித்துச் செல்லப்பட்ட வீடியோ
சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரையோர கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்த நிலையில், படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கொள்ளிடம் ஆற்றில் 2 லட்சம் கன அடிக்கு மேல் உபரி நீர் செல்வதால் நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளை மணல் உள்ளிட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் படகுகள் மூலமாகவும் தண்ணீரில் இறங்கியும் வெளியேறி வரும் நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கரைபுரண்டோடும் வெள்ளத்தில் மாடு அடித்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
Comments