பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் ஏழாவது ஆட்சிமன்றக் கூட்டம் நடைபெற்றது
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் ஏழாவது ஆட்சிமன்றக் கூட்டத்தில் பல்வகைப் பயிர்கள் சாகுபடி, விளைச்சலில் தன்னிறைவு, தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தல் ஆகியன பற்றி விவாதிக்கப்பட்டது.
டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகைப் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், அஸ்வினி வைஷ்ணவ், பியூஷ் கோயல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். தமிழகத்தின் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார்.
பல்வகைப் பயிர்கள் சாகுபடி, எண்ணெய் வித்துக்கள், பயறுவகைகளின் விளைச்சலில் தன்னிறைவு, தேசியக் கல்விக்கொள்கையைப் பள்ளிக்கல்வியிலும், உயர்கல்வியிலும் நடைமுறைப்படுத்துதல், நகர்ப்புற ஆளுமை ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பின் அனைவரும் குழுவாகப் படம்பிடித்துக்கொண்டனர்.
Comments