பிர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்து வரும் இந்திய வீரர்-வீராங்கனைகள்.!

0 3417

பிர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகளில் இந்திய வீரர்-வீராங்கனைகள் பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் இந்திய வீரர்கள் 4 தங்கம், 3 வெள்ளி, 7 வெண்கலம் என 14 பதக்கங்களை வென்றனர். மல்யுத்தத்தில் 57 கிலோ எடைப் பிரிவில் ரவிகுமார் தாகியா தங்கப் பதக்கம் வென்றார்.

மல்யுத்தப் போட்டியில் 74 கிலோ எடைப்பிரிவில் நவீன்குமார் தங்கப் பதக்கம் வென்றார். இறுதிச் சுற்றில் பாகிஸ்தான் வீரரை 9-0 என்ற புள்ளிக் கணக்கில் அவர் வீழ்த்தினார். மகளிர் 53 கிலோ எடைப்பிரிவில் மல்யுத்த வீராங்கனை வினிஷ்போகத் தங்கப்பதக்கம் வென்றார்.

டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவானியா பட்டேல் தங்கப்பதக்கம் வென்றார். 10 கிலோ மீட்டர் தூர நடை ஓட்ட போட்டியில் இந்திய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமியும், 3 ஆயிரம் மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீரர் அவினாஷ் சேபிளும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

லான் பவுல்ஸ் ஆண்கள் போட்டியில் இந்திய வீரர்கள் வெள்ளிப் பதக்கம் வென்றனர். மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 60 கிலோ எடைப்பிரிவில் ஜெய்ஸ்மின் லம்போரியாவும், 50 கிலோ பிரிவில் பூஜா கெலாட்டும் வெண்கலம் வென்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments