குடியரசுத் துணை தலைவராகிறார் ஜெகதீப் தங்கர்.!
நாட்டின் 14ஆவது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தங்கர், வரும் 11ஆம் தேதி பதவியேற்க உள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தலில் மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தங்கரும், முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வாவும் போட்டியிட்டனர். மொத்தம் பதிவான 725 வாக்குகளில், 528 வாக்குகள் பெற்ற ஜெக்தீப் தங்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
ஜெகதீப் தங்கருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் 14-வது குடியரசுத் துணைத் தலைவராக ஜெகதீப் தங்கர் வரும் 11ந் தேதி பதவியேற்க உள்ளார். குடியரசு துணைத் தலைவராகத் தேர்வான அவர் மாநிலங்களவைத் தலைவராகவும் செயல்படுவார்.
ராஜஸ்தானில் பிறந்த ஜெகதீப் தங்கர், மேற்கு வங்க ஆளுநராக பணியாற்றினார். 1993 ஆம் ஆண்டில் ராஜஸ்தானில் இருந்து எம்.எல்.ஏ.ஆக தேர்வான அவர், எம்.பி.யாகவும், மத்திய இணையமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
Comments