கர்நாடகாவில் ரூ.34,432 கோடி முதலீட்டில் 18 தொழில் திட்டங்கள்
கர்நாடகாவில் 34 ஆயிரத்து 432 கோடி ரூபாய் முதலீட்டில் 18 தொழில்துறை திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
8 புதிய திட்டங்கள் மற்றும் 10 கூடுதல் முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில்துறை வளர்ச்சி மேலும் அதிகரிப்பதுடன், 48 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Toyota Kirloskar Motor நிறுவனம் 3,661 கோடி ரூபாயும், பெங்களூரு Trualt பயோ எனெர்ஜி நிறுவனம் 1,856 கோடி ரூபாயும், அப்ளைடு மெட்டீரியல்ஸ் இந்தியா நிறுவனம் 1,573 கோடி ரூபாயும் முதலீடு செய்ய உள்ளன.
Comments