குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு..!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
வாக்குப்பதிவு தொடங்கியதும் முதல் ஆளாகப் பிரதமர் மோடி வாக்களித்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார்.
மத்திய அமைச்சர்கள், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, ஆம் ஆத்மி உறுப்பினர் ஹர்பஜன் சிங், பாஜகவின் ஹேமமாலினி ஆகியோர் வாக்களித்தனர். திரிணாமூல் காங்கிரசின் 39 உறுப்பினர்கள் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தனர்.
பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு வரும் நிலையில், மக்களவையில் அறுதிப்பெரும்பான்மையும், மாநிலங்களவையில் 91 உறுப்பினர்களையும் கொண்ட பாஜக வேட்பாளர் ஜெகதீப் தங்கர் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments