1500 கிலோ மீட்டர் விமானத்தில் பறந்து வந்த பெண்ணின் கைகள்..! இளைஞருக்கு உதவும் கரங்களானது..!
சென்னையில் மின்சார விபத்தில் இரு கைகளையும் இழந்த இளைஞருக்கு , குஜராத்தில் மூளைச்சாவடைந்த பெண்ணின் இரு கைகள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் பொறுத்தப்பட்டுள்ளது. 1500 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து விமானத்தில் சென்னைக்கு பறந்து வந்த கரங்கள், உதவும் கரங்களாக மாற்றப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
தூக்குடியை பூர்வீகமாக கொண்ட மருத்துவர் செல்வ சீத்தாராமன் என்பவர் தான் இரு கைகளை இழந்த இளைஞருக்கு தனது அறுவை சிகிச்சையால் கைகொடுத்த காப்பான்..!
குளோபல் மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவு துறை தலைவராக பணிபுரிந்துவரும் மருத்துவர் செல்வ சீத்தாரமனிடம், இருகைகளையும் மின்சார விபத்தில் இழந்த இளைஞர் ஒருவர் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார்.
அவர் வந்த நாளில் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் மாற்று உறுப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. அவர் தனது மருத்துவ தொடர்புகள் மூலம் குஜராத் மா நிலத்தில் மூளைச்சாவடைந்த ஒரு பெண்ணின் இரு கைகள் தானமாக கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது.
அதன்படி அந்த பெண்ணின் இரு கைகளும் முறையாக அகற்றப்பட்டு பாதுகாப்புடன் பெட்டியில் வைத்து விமானம் மூலம் 1500 கிலோ மீட்டர் உள்ள சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
அந்த பெண்ணின் கைகளை இளைஞருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி அருவை சிகிச்சை மூலம் கச்சிதாமாக பொறுத்தி மருத்துவர் செல்வ சீத்தாராமல் சாதனை படைத்தார்.
ஆணுக்கு பெண்ணின் கைகள் பொறுத்தப்படுவது இந்தியாவில் இதுவே முதல் முறை என்றும் இது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் அடுத்த நகர்வாக பார்க்கப்படுகின்றது
இந்த தகவல் அறிந்து இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நேரடியாக சென்று மருத்துவர் செல்வ சீத்தாராமனை சந்தித்து பாராட்டினார்.
அந்தவகையில் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த கையோடு தூத்துக்குடிக்கு திரும்பியவருக்கு நண்பர்கள் உறவினர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இரு கைக்களையும் இழந்த அந்த இளைஞர் , மருத்துவர் செல்வ சீத்தாரமனின் முயற்சியால் புதிதாக பொறுத்தப்பட்ட இரு கைகளுடன் நலமாக இருப்பதாக கூறப்படுகின்றது.
Comments