இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுக்குத் தகைசால் தமிழர் விருது..!

0 2816
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுக்குத் தகைசால் தமிழர் விருது..!

இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, விடுதலைப் போராட்ட வீரராகத் தன் இளம் வயதைச் சிறைச்சாலையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவர் எனக் குறிப்பிட்டுள்ளது.

விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லகண்ணுக்குப் பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை ஆகஸ்டு 15ஆம் நாள் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments